• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தினமும் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு 85 பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு

Byவிஷா

May 20, 2024

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினமும் 85 பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலமாக தற்போது கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேற்படி தடங்களில் குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பணி செய்து வருவதால் அவர்கள் திருவண்ணாமலை தட பஸ்களை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அதன் அடிப்படையில் வருகிற 23-ம் தேதி முதல் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து திண்டிவனம் செஞ்சி வழியாக 90 பஸ்கள் இயக்கப்பட உள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 44 பஸ்கள் ஆற்காடு, ஆரணி வழியாக இயக்கப்பட உள்ளது. தற்போது தினசரி கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து காஞ்சீபுரம், வந்தவாசி வழியாக இயக்கப்படும் 11 பஸ்களுடன் கூடுதலாக 30 பஸ்களும் இயக்கப்பட உள்ளது. ஆக மொத்தம் 85 பஸ்கள் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு தினசரி இயக்கப்பட உள்ளது. எனவே, பயணிகள் மேற்படி பஸ் வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.