• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஒரே நேரத்தில் ஒன்றல்ல இரண்டு காற்றழுத்த தாழ்வுப்பகுதி – என்ன நடக்கப்போகுதோ!

Byமதி

Nov 29, 2021

வடகிழக்கு பருவமழை அதிதீவிர மறைந்து கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக விடாமல் பெய்து வருகிறது. இதனால், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரால் மூழ்கி இருக்கின்றன.

இந்தநிலையில், தெற்கு அந்தமான் அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, மத்திய கிழக்கு அரபிக்கடலில் டிசம்பர் 1ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் அந்தமான் மற்றும் அரபிக் கடல் என ஒரே நேரத்தில் இரு காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மழை இன்னும் ஓய்ந்தபாடில்லை. இந்நிலையில் இன்னும் புதிதாக இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலம் என அறிவித்துள்ளது சற்றே அனைவரையும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.