தொடர் தலைவலிக்கு சிகிச்சை பெற்று வந்த வடமாநில இளைஞர் ஒருவர் கோவை அரசு மருத்துவமனை கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வடலூரில் உள்ள சுகுணா சிக்கன் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த துப்பில் வரலா (22). என்பவர் தலைவலி காரணமாக உடுமலைப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்குச் சென்ற போது மருத்துவர்கள் எதுவும் இல்லை என்று கூறி அவரை அனுப்பி உள்ளனர்.
இந்நிலையில் தலைவலி தொடர்ந்து இருந்து வந்ததால் கோவையில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் பரிசோதனை செய்து உள்ளார். அங்கும் மருத்துவர்கள் எதுவும் இல்லை என்று கூறி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலை மடத்துக்குளம் சென்றவருக்கு மீண்டும் மாலை ஐந்து மணிக்கு தலை வலிக்கிறது என்றதும், கோவை அரசு மருத்துவமனைக்கு இரவு 9 மணிக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் நள்ளிரவில் சுமார் 12.00 மருத்துவமனையின் கழிவறையில் துப்பில் வரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைக் கண்ட மருத்துவமனை ஊழியர்கள் உடனடியாக ரேஸ் கோர்ஸ் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
துப்பில் வராவின் தற்கொலைக்கான காரணம் குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.