
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே கொடிக்குளம் 5 ஊர் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி உடன்காட்டுப்பட்டில் முதலாம் ஆண்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது. மதுரை தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி துவக்கி வைத்தார்.

செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் சுதாகரன் உசிலம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித் பாண்டி முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வனிதா ராமன் வரவேற்றார். இதில் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை தேனி திண்டுக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த காளைகள் அவிழ்த்து விடப்பட்டன ஒரு சுற்றுக்கு ஒன்பது வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
வெற்றி பெற்ற காளை மாடு மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கருப்பத்தேவன் தமிழரசன் ( ஊர் கமிட்டி) கொடிக்குளம் ஐந்து ஊர் மற்றும் உடன்காட்டுபட்டி ஒத்த வீடு பொதுமக்கள் செய்திருந்தனர்.
