மதுரை பாஜக மேற்கு மாவட்டம் அனுப்பானடி மண்டல் சார்பாக ஆப்ரேஷன் சிந்தூர் போர் வெற்றி பெற்றதற்க்கு, ராணுவ வீரர்களையும், இந்திய அரசாங்கத்தையும் கௌரவிக்கும் விதமாக, அனுப்பானடி மண்டல் பொதுச் செயலாளர் தனசேகரன் தலைமையிலும், மண்டல் தலைவர் S.M. கண்ணன் அவர்கள் முன்னிலையில், மேல அனுப்பானடி ஹசிங் போர்டு முதல் தீயணைப்பு நிலையம் வரை பேரணியாக சென்றனர். இந்நிகழ்வில் மேற்கு மாவட்ட செயலாளர் சோலை மணிகண்டன் கலந்து கொண்டு சிறப்புரையற்றினார்.

மேலும் இந்நிகழ்வில் மண்டல் பார்வையாளர் ஜெய்கணேஷ் ஜி, வழக்கறிஞர் நகர் பிரிவு மாவட்ட செயலாளர் ஸ்டாலின் குமார், மண்டல் பேச்சாளர் பீஷ்மர், மண்டல் துணைத் தலைவர்கள் ராகேஷ், பூ பாண்டி, தமிழ்செல்வன், நிர்வாகிகள் ராஜசேகர், நாகரத்தினம், மகளிர் அணி அங்காள ஈஸ்வரி, ஆன்மீகப் பிரிவு மண்டல் தலைவர் ராஜா, விவசாய மண்டல் தலைவர் ராமதாஸ், மண்டல் பொருளாளர் பாஸ்கரன், ஐ டி பிரிவு தலைவர் சதீஷ் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள், உறுப்பினர்கள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.