• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரையில் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை

Byp Kumar

May 21, 2023

மதுரையில் திருவள்ளுவர் ஓவியத்தை குரளால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணைக் கட்டிக் கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றி நோபல் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது
மதுரை பரவை அருகில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்ப பயிற்சி பள்ளியும் ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி பாரத சமூக பண்பாட்டுக் கழகம் இணைந்து நோபல் உலக சாதனை
சிலம்ப நிகழ்ச்சி நடைபெற்றதுஇந்த உலக சாதனைகள் 5 மணி நேரம் தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் குழுவாக சிலம்பம் சுற்றுதல் திருவள்ளுவர் ஓவியத்தை குரல்களால் வரைந்து கொண்டே சிலம்பம் சுற்றுதல் மரக்காலில் கண்ணை கட்டிக்கொண்டு 5 மணி நேரம் 32 வகையான சிலம்பம் சுற்றுதல் மற்றும் ஆனிப்பலகையின்மேல் நின்று கொண்டு ஒற்றைச் சிலம்பம் நீர்சிலம்பம் மற்றும் நெருப்பு வளையத்திற்குள் சிலம்பம் சுற்றுதல் ஆணிப்பலகையில் நின்று கொண்டு தன்மாணவியை சுமந்தபடி இருவரும் பல திறமைகளை வெளிப்படுத்தினார் .

இந்நிகழ்வினை நோபல் உலக சாதனை நிறுவனம் அங்கீகரித்து சான்றிதழ்கள் கோப்பைகள் வழங்கினார்கள் இந்நிகழ்ச்சிக்கு மங்கையர்க்கரசி கல்வி குழுமம் செயலாளர் அசோக்குமார் தலைமையிலும் மதுரைஇலக்கிய மன்ற துணைத் தலைவர் சம்பத் தமிழ் தேசிய சான்றோர்கள் அறக்கட்டளை தலைவர் ராஜதுரைவேல்பாண்டியன் ஜல்லிக்கட்டு பேரவை டாக்டர் அழகர்சாமி நோபல் உலக சாதனை நிறுவனத்தின் அதிகாரி வினோத் ஆகியோர் முன்னிலையிலும் சிறப்பு அழைப்பாளர்களாக ஜல்லிக்கட்டு பேரவை இலக்கிய அணி தலைவர் அவனிமாடசாமி பாப்பம்மாள்ராமன் குடும்பத்தினர்கள் மற்றும் இரமேஷ் துரை.விஜயபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள் சாதனை நிகழ்த்திய மாணவர்களுக்கு பரிசு கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கினார்கள் விழாவில் ஏராளமானபொதுமக்கள் பெற்றோர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் விழாவிற்கான ஏற்பாட்டினை ஆசான் காட்டு ராஜா இலவச சிலம்பம் பயிற்சிபள்ளி ஆசான் முத்துநாயகம் பயிற்சியாளர் இன்பவள்ளி ஆகியோர் செய்திருந்தனர்
பேட்டி: இன்பவள்ளி சிலம்பம் பள்ளியின்பயிற்சியாளர்