• Mon. Nov 10th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வலிமையில் ரொமன்ஸ்க்கு நோ!

அஜித்குமார் நடிப்பில் வெளியாகவுள்ள ‘வலிமை’ படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்துள்ளார். இப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேஷி நடித்துள்ளார்.

ஹூமா குரேஷி, பான் இந்தியா படமான ‘வலிமை’ படத்தில் சில ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளாராம். இதைப் பற்றி பேசிய ஹூமா, தனது ரசிகர்கள் தன்னை ‘புதிய அவதாரத்தில்’ பார்ப்பதற்காக காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், எனக்கு ஆக்‌ஷன் படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும், அதனால் எனக்கு இந்த கதாபாத்திரம் கிடைத்தவுடன் அதில் உடனடியாக நடிக்க முடிவு செய்தேன். என்றார்!

சமீபத்தில், மற்றொரு பத்திரிகையாளர் சந்திப்பின் போது, ​​ஹுமா அஜித்துடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி கூறினார். ஒட்டுமொத்த படக்குழுவுடன் இணைந்து பணியாற்றுவதை ரசித்ததாகவும், குறிப்பாக நடிகர் அஜித்துடன் நடித்த காட்சிகளை மிகவும் ரசித்ததாகவும் அவர் கூறினார். மேலும், அஜித் எளிமையானவர் மற்றும் அடக்கமானவர் என்றும், அவர் பெரிய நடிகர் என்பதை மனதில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் அவர் பகிர்ந்து கொண்டார். ரஜினிகாந்துடன் ‘காலா’ படத்துக்குப் பிறகு ஹூமா குரேஷி நடிக்கும் இரண்டாவது தமிழ்ப் படம் இது.