நடிகர் தனுஷ் தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்! அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஸ்வர்யா இருவரும் பிரியப்போவதாக சமீபத்தில் அறிவித்ததும், ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தனது மகன்களுக்காக தனுஷ் மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வார் என்றும் ஒரு பக்கம் கூறப்பட்டது.
இந்நிலையில் தனது மகன் யாத்ராவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து இதற்கு முன் இதை நான் எங்கே பார்த்தேன் என்று நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகைப்படத்திற்கு இலட்சக்கணக்கான லைக்ஸ்களை தனுஷ் ரசிகர்கள் குவித்து வருகின்றனர்.
