• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

விசிக சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கு அனுமதி கிடையாது- தமிழக காவல்துறை

Byகாயத்ரி

Sep 29, 2022

அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்துவதற்கு நிபந்தனையுடன் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்த நிலையில், சட்டம்- ஒழுங்கு பிரச்சனை காரணமாக ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி தர இயலாது என தமிழ்நாடு காவல்துறை மறுப்பு தெரிவித்தது.

மாநிலத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வருவதால் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தடை என்று கூறியுள்ளது.தமிழகம் முழுவதும் அக்.2-ஆம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் மட்டுமில்லாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழகம் தழுவிய சமூக ஒற்றுமை மனித சங்கிலி, பேரணிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அக்.2-ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி அனுமதி கோரியிருந்தது. இந்த நிலையில், அதற்கு அனுமதி தர இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், அக்.2-ஆம் தேதி பேரணி, பொதுக்கூட்டம், போராட்டம் உள்ளிட்டவை நடத்த எந்த அமைப்புகளுக்கும் அனுமதி இல்லை என தமிழக காவல்துறை திட்டவட்டமாக தகவல் கூறியுள்ளது.