• Thu. Dec 12th, 2024

சாதி, மதம் வேறுபாடு இல்லை… உலக ரத்த தான தினத்தையொட்டி முதல்வர் ட்வீட்..

Byகாயத்ரி

Jun 14, 2022

சாதி, மதம், நிறம், பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை என உலக ரத்த தான தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், ‘விபத்து, அறுவை சிகிச்சை உள்ளிட்ட அவசரத் தேவைகளின்போது பிறர் உயிர் காக்க குருதி கொடையளிப்போரின் நல்லுள்ளம் போற்றுவோம்! சாதி – மதம் – நிறம் – பாலினம் என எந்த வேறுபாடும் குருதிக் கொடைக்கில்லை! குருதிக் கொடையளித்து மனித உயிர் காப்போம்! மானுடம் தழைக்கச் செய்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.