• Thu. Dec 12th, 2024

முதல்வரை விமர்சித்த இபிஎஸ் மீது புகார்…

Byகாயத்ரி

Jun 14, 2022

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை விமர்சனம் செய்ததாக முன்னாள் முதல்வர் இபிஎஸ் மீது காவல் நிலையத்தில் புகழேந்தி என்பவர் புகார் அளித்துள்ளார். நிலவாரபட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன் நடந்த கூட்டத்தில், ஓராண்டு கால திமுக ஆட்சியில் மக்களுக்கான நன்மை ஏதும் நடக்கவில்லை. ஸ்டாலின் அரசு திறமையற்ற அரசாக உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது” என இபிஎஸ் விமர்சித்த நிலையில் அவர் மீது சேலம் மாவட்ட எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.