• Mon. Mar 17th, 2025

நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி அதிகரிப்பு..!

Byவிஷா

Jun 17, 2023

நாடு முழுவதும் நடத்தப்படும் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் நடத்தப்பட்ட இந்தாண்டுக்கான நீட் தேர்வில் அரசு பள்ளி மணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது என்று பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த தகவலில், தேர்வெழுதிய 12 ஆயிரத்து 997 பேரில் 3 ஆயிரத்து 982 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.