லு’ இந்த நகைச்சுவைக் காட்சியை எளிதில் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். இந்த நகைச்சுவையைப் போலவே, சர்ச்சையின் முழுவடிவமாகத் திகழும் நித்தியானந்தாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றும், சமாதியாகிவிட்டார் என்றெல்லாம் புரளிகள் கிளம்பி வந்த நிலையில், அவர் தற்போது கைலாசாவில் இருந்து ஆப்பிரிக்காவுக்கு தூது விட்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த சர்ச்சையின் முழுவடிவமாகத் திகழ்ந்த சாமியார் நித்தியானந்தா கைலாசா என்ற தனி நாட்டினை உருவாக்கி அங்கு தற்போது இருக்கிறார். நாட்டுக்கு அதிபர் என்று தன்னைத் தானே அறிவித்துக்கொண்ட நித்தியானந்தா, கைலாசா நாட்டுக்கென்று தனி நாணயம், விசா என்று அதகளம் செய்தார். அதுமட்டுமின்றி கைலாசாவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கான் விசா இலவசம் என்று அறிவித்தார். கைலாசாவில் நித்தியானந்தாவுடன் பலர் இருக்கின்றனர். அங்கிருந்து புகைப்படத்தையும், வீடியோக்களையும் வெளியாவது வழக்கமாக இருக்கிறது.
இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் கானா நாட்டின் மத்திய பகுதியில் உள்ள எஃபுடு என்ற மாவட்டத்துடன் புதிய உறவை வளர்க்க இருப்பதாக கைலாசா அறிவித்துள்ளது. இதுகுறித்து கைலாசாவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில்,
“பழமையான கலாசாரம், இந்துக்களுக்கான முதல் நாடான கைலாசா நாடு; மத சுதந்திரம் மற்றும் மற்ற உரிமைகள், இளைஞர்களுக்கான தலைமை, கல்வி, கல்வி உரிமை பரிமாற்றம், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட உறவுகளின் கீழ் கானாவில் உள்ள எப்புடு மாவட்டத்துடன் தொடக்க உறவில் இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக, நித்தியானந்தாவுக்கு உடல்நலம் சரியில்லை என்றும், அவர் சமாதி நிலையை அடைந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சில நாள்களிலேயே, தனக்கு ஒன்றும் இல்லை திரும்ப வந்துட்டேன் என நித்தியானந்தா தன் கைப்பட எழுதி அதன் புகைப்படத்தை பகிர்ந்தார். இப்படிப்பட்ட சூழலில் கானா நாட்டுடன் நித்தியானந்தா உறவு வளர்க்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.