குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி, இனி சினிமா, டிவி நிகழ்ச்சிகளில் மூன்று மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக் கூடாது என தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
தமிழ் சினிமாவில், குழந்தை நட்சத்திரங்கள் அதிக அளவு வரவேற்பை பெறுகிறார்கள். ஆரம்ப காலத்தில் குட்டி பத்மினி, நடிகை ஸ்ரீதேவி மற்றும் கமல் போன்றவர்கள் குழந்தை நட்சத்திரங்களாக தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார்கள். இவர்களை அடுத்து 90ஸ் கிட்ஸ் பேவரைட் நடிகை ஷாலினி, பேபி ஷாமினி என இருவரும் தங்களின் சுட்டி பேச்சாலும், மழலை நடிப்புகளால் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றனர்.
இவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தெய்வத் திருமகள் பேபி சாரா, அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்த பேபி அனிகா மற்றும் தெறி படத்தில் விஜய்யின் மகளாக நடித்த பேபி நைனிகா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வரவேற்பை பெற்றனர். இதையடுத்து, இமைக்கா நொடிகள் படத்தில் லேடி சூப்பர் ஸ்டாரின் மகளாக நடித்த மானஸ்வி தன்னுடைய துறுதுறு பேச்சால், அதிரடி நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். சமீபத்தில், லழரவரடிந மூலம் பிரபலமடைந்து தற்போது ழு2 என்கின்ற படத்தில் நயன்தாராவிற்கு மகனாக நடித்து நல்ல வரேவேற்பை பெற்றுள்ளார்.
இது ஒருபுறம் இருந்தாலும், தற்போது தொலைக்காட்சி மற்றும் சினிமா வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் சமீபத்திய ஆய்வின் படி, ஒவ்வொரு குழந்தையும் , ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. இதனால், 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. அப்படி இருக்க சினிமாவில் நடிக்கும் குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும்..? என்ற அச்சம் வருகிறது.
இந்த நிலையில், தற்போது 3 மாதத்திற்கு உட்பட்ட குழந்தைகளை நடிக்க வைக்கக்கூடாது. மூன்று மாதத்திற்கு மேல் உள்ள குழந்தையை நடிக்க வைக்க மாவட்ட ஆட்சியரிடம் தயாரிப்பாளர்கள் அனுமதி பெறவேண்டும், என்று தேசிய குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. மேலும், குழந்தை நட்சத்திரங்கள் 6 மணிநேரத்துக்கும் மேலாகவோ, இரவு 7 மணி முதல் காலை எட்டு மணி வரை பணியாற்றவோ அனுமதிக்க கூடாது. குறிப்பாக, கேலிக்கு ஆளாகும் பாத்திரங்களில் குழந்தைகளை நடிக்க வைக்க கூடாது. இந்த விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மீறினால், மூன்று வருடம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.