• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

யோகி ஆதித்யநாத்தை விமர்சித்த சிறுவனுக்கு நூதுன தண்டனை..

Byகாயத்ரி

May 27, 2022

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை விமர்சிக்கும் விதமாக சமூக வலைத்தளங்களில் படத்தை பகிர்ந்த 17 வயது சிறுவனுக்கு நூதன தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. அதாவது சிறுவன் அங்குள்ள மாட்டுத்தொழுவத்தை சுத்தம் செய்து முடிக்க வேண்டும் எனவும் 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சிறார் நீதி வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த மாட்டுத்தொழுவத்தை 15 நாட்களில் சுத்தம் செய்ய வேண்டும். சிறுவனுக்கு பொதுஅறிவு மற்றும் சுயஒழுக்கம் வளர்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த ஜனவரி 18 அன்று யோகியின் படத்தை சிறுவன் சமூகஊடகங்களில் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.