


தமிழக மின் ஆளுமை முகமை இயக்கம் உருவாக்கிய குழந்தை வளர்ச்சி கண்காணிப்பு செயலி வாயிலாக 26 லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இது பற்றி மின் ஆளுமை முகமை இயக்க அதிகாரிகள் கூறியபோது, சமூக நலத்துறையின் அங்கன்வாடி மையங்களில் பயிலும் குழந்தைகளின் வளர்ச்சியை கண்காணிக்க செயற்கை நுண்ணறிவு வாயிலாக செயல்படும் குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிப்பு செயலியை மின் ஆளுமை முகமை இயக்ககம் உருவாகியிருக்கிறது.
இந்த செயலி ஒரு வாரத்திற்கு முன் சோதனை அடிப்படையில் அங்கன்வாடி மையங்களில் செயல்பாட்டிற்கு வந்தது. அதில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட மொபைல் போனில் செயலி பதிவிறக்கம் செய்து கொடுக்கப்பட்டது. அந்த செயலியில் ஒரு குழந்தையை முழுமையாக படம் எடுத்ததும் அந்த குழந்தையின் உயரம், எடை, ஊட்டச்சத்து குறைபாடு போன்ற விவரங்கள் தானாகவே கணக்கிடப்படுகிறது. சோதனையின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்ட செயலி வாயிலாக ஒரு வாரத்தில் இருபத்தி ஆறு லட்சம் குழந்தைகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட இருக்கிறது. செயலியை பயன்படுத்துவது மிகவும் எளிமையாக இருப்பதால் குழந்தைகளின் விவரங்களை உடனடியாக பதிவு செய்து கொள்ள முடிகிறது என அவர்கள் கூறியுள்ளனர்.


