• Mon. Sep 25th, 2023

அறநிலையத்துறை உயர் அலுவலர்களுக்கு புதிய வாகனம்..!

Byகாயத்ரி

Apr 4, 2022

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இந்து சமய அறநிலையத் துறையில் மக்களை கவரும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்து சமய அறநிலையத் துறை உயர் அலுவலர்களுக்கு ரூ.5.08 கோடியில் 69 வாகனங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கியுள்ளார். அறநிலையத்துறை துணை மற்றும் இணை ஆணையர்கள் இந்த புதிய வாகனங்களை பயன்படுத்த உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *