தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜீன் 13 ஆம் தேதி1 முதல் 10 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. அதே போல் 12 ஆம் வகுப்புக்கு ஜூன் 20 தேதியும் 11 ஆம் வகுப்புக்கு ஜூன் 27 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதியும் 11 ஆம் வகுப்பிற்கு ஜூன் 24 ஆம் தேதி பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களை பள்ளி நிர்வாகமே தங்களது பேருந்துகளில் அழைத்து சென்று, மீண்டும் வீடுகளுக்கு கொண்டு சென்று விடுகிறது. மேலும் இந்த வாகனங்களின் தரம் குறித்து மாவட்ட கல்வி அலுவலர்களும் மோட்டார் வாகன ஆய்வாளர்களும் அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் பள்ளி வாகனங்கள் விபத்தில் சிக்குவது தற்போது வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நெல்லை பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற ஆட்டோ நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 வயது எல்.கே.ஜி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. அதே போல் கடந்த ஆண்டு சென்னை வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வேன் மோதி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில் தமிழகத்தில் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமிரா, எச்சரிக்கை சென்சார் கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளி வாகனங்களில் முன்பக்கம், பின்பக்கம் தலா ஒரு கேமிரா கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும் வாகனத்தின் பின்புறம் சென்சார் கருவியை வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
- ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றம்திருப்பி அனுப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை மீண்டும் ஏகமனதாக நிறைவேற்றி மீண்டும் ஆளுனருக்கு […]
- பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பறிமுதல்…..விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் முறைகேடாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 288 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களை பறிமுதல் செய்த […]
- ஓராண்டில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புது சாதனை!உலக வன தினம் நேற்று முன் தினம் கொண்டாடப்படும் நிலையில் சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் […]
- லைஃப்ஸ்டைல்வெல்லம் சேர்த்த இஞ்சி டீயின் நன்மைகள்:
- விழுப்புரத்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி..!விழுப்புரத்தில் நேற்று திடீரென ஆலங்கட்டி மழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 143: ஐதே கம்ம யானே ஒய்யெனதரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்துஓரை […]
- ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகளுக்கு சிறைகர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்து கருத்து […]
- இன்று இந்தியாவின் எடிசன் ஜி.டி. நாயுடு பிறந்த தினம்இந்தியாவின் எடிசன் என்று போற்றப்பட்ட தமிழகத்தின் அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு பிறந்த தினம் இன்று […]
- பெரம்பலூரில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேனர் வைத்த தி.மு.க பிரமுகர்..!பெரம்பலூரில் தி.மு.க பிரமுகர் ஒருவர் பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவாக பேனர் வைத்துள்ளதால், அங்கு சலசலப்பு ஏற்பட்டுள்ளது.பெரம்பலூர் […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சேரங்கோடு கிராம சபைக் கூட்டம்உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கையுன்னியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வைத்து சேரங்கோடு […]
- கிருஷ்ணகிரி ஆணவக்கொலை..,
சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி கவன ஈர்ப்பு தீர்மானம்..!கிருஷ்ணகிரியில் நடைபெற்ற ஆணவக்கொலை சம்பவம் தொடர்பாக, இன்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கவன […] - புதுச்சேரியில் தண்ணீர் விழிப்புணர்வு குறித்த ‘வாட்டர் மேட்டர்ஸ் மேளா’..!ஒரு வருடத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை நட்டு காவேரி கூக்குரல் இயக்கம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.உலக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் உங்களை நிர்ணயிக்கும் இரண்டு விஷயம். 1) உங்களிடம் ஒன்றுமில்லாதபோது நீங்கள் காக்கும் பொறுமை.2) உங்களிடம் […]
- இன்று உலக வானிலை நாள்உலக வானிலை நாள் (World Meteorological Day) (மார்ச் 23).உலக வானிலை நாள் ( World […]
- இன்று எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய அமாலி எம்மி நோய்தர் பிறந்த தினம்இயற்கணித மாறுபாடுகள் மற்றும் எண்ணில் கோட்பாடுகளை அறிமுகப்படுத்திய ஜெர்மானிய கணிதவியலாளர் அமாலி எம்மி நோய்தர் பிறந்த […]