• Sat. Jan 24th, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

நியூ மாடல் ஜாக்கெட் டிசைன்… இனி இதுதான் பெண்களின் விருப்பமாக மாறுமோ?!

Byமதி

Dec 8, 2021

தற்போது உள்ள பெண்கள் பெரும்பாலும் புடவையின் விலையைவிட அதிகமாக ஜாக்கெட்களின் டிசைன்க்காக செலவிடுகிறார்கள். ஆரி வேலை, எம்பிராய்டரி பிளவுஸ் டிசைன் என ஒவ்வொரு புடவைக்கு ஏற்ப பல்வேறு டிசைன்கள் உள்ளன.

அந்தவகையில் சமீபத்தில் தனது தைரியமான பேஷன் முயற்சிக்காக ஒரு பெண் பிரபலமானார். அதில் அவர் பாரம்பரிய ஜாக்கெட் அணியாமல், அதற்கு பதிலாக மருதாணியை பிளவுஸ் போல் அணிந்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.தற்போது அந்த வீடியோ வைரலாகி உள்ளது.

அந்த வீடியோவில், அந்தப் பெண் ஜாக்கெட் அணிவதற்குப் பதிலாக தனது உடலின் மேற்பகுதியில் மெஹந்தி டிசைனை வரைந்து, பாரம்பரியமான வெள்ளைச் சேலையை அணிந்துள்ளார். ரவிக்கை போல தோற்றமளிக்கும் வகையில் அழகாக மெஹந்தி, தோள்கள் மற்றும் முன்கைகளுக்கு மேல், நேர்த்தியான, நூட்பமான முறையில் வரையப்பட்டுள்ளது.