கரூர் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாவது இளங்கலை மருத்துவப் பட்டப்படிப்பு நிறைவு விழா மற்றும் புதிய கட்டப்பணிகள் தொடக்க விழா ,புதிய மருத்துவ உபகரணங்கள் வழங்கும் விழா மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி மற்றும் கரூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்பாலாஜி, மற்றும் ஜோதிமணி ,கலந்து கொண்டார். தொடர்ந்து 146 இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கு பெற்றோர்களுடன் பட்டத்தை வழங்கினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
தமிழகத்தில் விரைவில் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டதை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் முழு உடல் பரிசோதனை செய்யப்படும் தனியார் மருத்துவ மனையில் ரூ 15 ஆயிரம் வரை முழு உடல் பரிசோதனை செய்ய செலவாகிறது. இந்த திட்டம் இலவசமாக முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

இதன் மூலம் தமிழகம் முழுவதும் 1256 முகாம் நடைபெற உள்ளது. டிசம்பர் இறுதிக்குள் இந்த நடத்தி முடிக்கப்பட்டு மருத்துவ துறையில் ஒரு மருத்துவ புரட்சி செய்ய முதல்வர் திட்டமிட்டு உள்ளார் என்றார்.