சென்னை ஒட்டியம்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி. ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் அங்குள்ள பொது மக்களுக்கு பயணம் செய்வதற்கு கடினமாக உள்ளதால், புதியதாக பேருந்து வேண்டுமென்று. ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வீரபாகிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து, அந்த மனுவை பரிசளித்து அந்த ஊர் மக்களுக்கு புதியதாக பேருந்து வேண்டுமென்று தமிழக முதல்வரிடம் மனு அளித்து, அந்த மனுவை ஏற்று போக்குவரத்துதுறை அமைச்சரிடம் மக்கள் பயன்பாட்டிற்காக இரண்டு புதிய பேருந்து வழங்குமாறு ஆணையிட்டார். அதனை தொடர்ந்து, இந்த இரண்டு புதிய பேருந்து இன்று மக்கள் பயன்பாட்டிற்காக சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் இந்த இரண்டு பேருந்து மக்கள் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார். பொதுமக்கள் அந்த பேருந்தில் பயணம் செய்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில் ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வீரபாகு, துணைத் தலைவர் லோகிதாஸ், எம்டி ஜோன்ஸ், புனித தோமையார் மலை ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.வெங்கடேஷ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் J. E. பாண்டியன், வார்டு உறுப்பினர்கள் செல்வி லோகநாதன், கன்னியப்பன், வித்யா ஸ்ரீ கோகுல், s. சதீஷ், மஞ்சுளா மோகன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கழகத் தோழர்கள், பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)