மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஊராட்சிக்கு உட்பட்ட புளியந்துரை கிராமத்தில் சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை நேரடி பேருந்து சேவை பெறாத கிராமத்திற்கு முதல்முறையாக நேரடி பேருந்து சேவையை சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சீர்காழியிலிருந்து இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயன் பெறும் வகையில் புளியந்துரை வழியாக புதுப்பட்டினம் வரை செல்லும் புதிய பேருந்து சேவை இன்று துவக்கப்பட்டது. நிகழ்வில் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரபாகரன் நகர செயலாளர் சுப்புராயன் பொது மண்டலம் மேலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
