• Thu. Apr 25th, 2024

நிர்வாணமாக நடித்திருக்கும் புதிய நடிகர்

சினிமாவில் நடிகைகள் ஆடை குறைத்து நடிப்பதும் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா புஷ்பா படத்தில் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதும்.
ஆடை படத்தில் அமலாபால்நிர்வாணமாக நடித்ததும் பரப்பபாக பேசப்பட்டது சிட்டிசன் படத்தை இயக்கிய சரவணசுப்பையா 16 வருடங்களுக்கு பின் இயக்கி இருக்கும் படம்”மீண்டும் “படத்தில் அறிமுக நடிகர் முதல் படத்திலேயே முழு நிர்வாணமாக நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஹீரோ சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் ‘மீண்டும்’.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் இயக்குநர் சரவணன் சுப்பையா. இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப் படமான ‘சிட்டிசன்’ மற்றும் ‘ஏபிசிடி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

இந்த ‘மீண்டும்’ படத்தில் கதிரவனுக்கு ஜோடியாக அனைகா நடித்திருக்கிறார். இவர் ‘டிக்கிலோனா’, ‘நட்பே துணை’ ஆகிய படங்களில் நடித்தவர்.

மேலும், பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன், அபிதா செட்டி, யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

கவிஞர் வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது படத் தொகுப்பு செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார். நடன இயக்கத்தை ராதிகா அமைத்துள்ளார்.

விஜய் நடித்த ‘புலி’ படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் இந்த மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார். தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார்.

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர்.

இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியாந தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர்.

கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் சிங்கள ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *