

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் பயணம் செய்து வருகின்றனர்.
கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பிற்பகலுக்கு மேல் மாலை வரை ஆங்காங்கே விட்டு விட்டு மழை பெய்தது. இணை அடுத்து கோவையில் இருந்து உதகை செல்லும் பிரதான சாலை உள்ள பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மேம்பாலத்திற்கு மேல் மழை நீர் தேங்கி தெப்பக்குளம் போல் காட்சி அளிக்கிறது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். மேலும் மேம்பாலத்தில் மழை நீர் தேங்கியதால் பாலமா ? தொட்டிபாலமா ? என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கேலி செய்து வருகின்றது. உடனடியாக பாலத்தில் இருக்கும் குறைபாடுகளை சரி செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

