• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நீட்- இயற்பியல் தேர்வு கடினம்-மாணவர்கள் கருத்து

By

Sep 12, 2021 , ,

நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் மதியம் 2 மணிக்கு தொடங்கிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

நாடு முழுவதும் நடப்பு ஆண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய நிலையில், மாலை 5 மணி அளவில் தேர்வு நிறைவுபெற்றது. நாடு முழுவதும் 3,862 மையங்களில் 16.14 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்ளிட்ட மொத்தம் 13 மொழிகளில் தேர்வு நடைபெற்றது.

தமிழகத்தில் 18 நகரங்களில் உள்ள 224 மையங்களில் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் 70 ஆயிரம் மாணவிகள், 40 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 1.10 லட்சம் பேர் எழுதினர். இதுபோன்று புதுச்சேரியில் 14 மையங்களில் நடந்த நீட் தேர்வை 7,123 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர்.

நீட் தேர்வில் இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் கடினமாக இருந்தாகவும், உயிரியல் வினாக்கள் எளிதாக இருந்ததாகவும் நீட் நுழைவுத்தேர்வு வினாத்தாள் குறித்து மாணவர்கள் தங்களது கருத்தை தெரிவித்துள்ளனர்