• Sun. Dec 1st, 2024

நீட் தேர்வு – மாநில பாடத்திட்டத்தில் தேர்வெழுதியவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகம்

Byமதி

Nov 3, 2021

தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1,08,318 பேரில் மொத்தம் 58,922 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் 42,202 பேர் தமிழ் வழி தேர்ச்சி எழுதியவர்கள் என்பதால், நீட் தேர்வு எழுதியவர்களில் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்று அதிலேயே நீட் தேர்வு எழுதியவர்கள் மொத்தம் 88,993 பேர். இவர்களில் 42,202 பேர் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களில் நீட் நுழைவுத்தேர்வு தேர்ச்சி பட்டியலில், முதல் 10,000 இடங்களில் 175 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *