• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மதுரை பாண்டி கோவில் அருகே
வேன் கவிழ்ந்து விபத்து: 10 பேர் காயம்

மதுரை பாண்டி கோவில் அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மதுரை பாண்டி கோவில் அருகே கும்பகோணம் சென்று விட்டு 24 பயணிகளுடன் மதுரை திரும்பிக் கொண்டிருந்த மினி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தல்லாகுளம் தீயணைப்புத் துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டிரைவர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாக போலீசார் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.