• Wed. Sep 9th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு வயல்களுக்குள் வீணாகும் குடிநீர்…,

ByKalamegam Viswanathan

Oct 10, 2023

மதுரை மாவட்டம் இரும்பாடி வைகை ஆற்றில் இருந்து மன்னாடிமங்கலம் காடுபட்டி வழியாக திருமங்கலம் நகராட்சிக்கு குடிநீர் தேவைக்காக பைப் லைன் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இதில் காடுபட்டி பகுதியில் ஆங்காங்கே குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. குறிப்பாக காடுபட்டி ஊரின் முன்பாக தென்கரை கம்மாய் செல்லும் பாதைக்கு அருகே ஒரு பெரிய உடைப்பு ஏற்பட்டு அதனால் தண்ணீர் வீணாகி வருகிறது. மேலும் வீணாகும் தண்ணீர் குறித்து பலமுறை நகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. வீணாகும் தண்ணீரால் அந்தப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களும் பாழ்பட்டு வருகின்றன. இது குறித்து தமிழ் நாடு அரசு குடிநீர் வடிகால் வாரியம், மதுரை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து வீணாகும் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தற்போது உள்ள பருவ நிலையின் காரணமாக மழையின் அளவு குறைந்து வருகிறது எதிர்வரும் காலங்களில் அதிகப்படியான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது அதனை கருத்தில் கொண்டு இரும்பாடி முதல் திருமங்கலம் வரை உள்ள அனைத்து உடைப்புகளையும் சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.