

நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதலித்து கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் திருமணம் செய்துக் கொண்டனர். திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் சில தினங்களுக்கு முன்பு தங்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்தனர். இவர்களின் இந்த அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனிடையே வாடகைத் தாய் மூலம் இவர்கள் குழந்தை பெற்றுக் கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற நயன்தாரா-விக்னேஷ் சிவனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன பின்னரே வாடகை தாய் மூலம் குழந்தை பெற இயலும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை ஆண் குழந்தை விவகாரத்தில் இணை இயக்குனர் தலைமையிலான 3 பேர் கொண்ட குழு அமைத்து விசாரணையை தொடங்கியுள்ளது.
