• Thu. Jan 8th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நயினார்நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் ஆதரவு

Byவிஷா

Apr 12, 2024

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லி பாஜக.விடம் நெருக்கம் பெறலாம் என்ற நோக்கத்தில் தொகுதி முழுவதும் நயினார் நாகேந்திரன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக பல்வேறு அமைப்பினரையும் சந்தித்து தனக்கான ஆதரவை கோரி வருகிறார்.
அந்த வகையில், கராத்தே செல்வினின் காமராஜர் ஆதித்தனார் கழகத்திடமும், ஆதரவு கோரப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதன்படி கராத்தே செல்வினின் மனைவி வயோலா கூறுகையில், மதுக்கடைகளை ஒழிப்போம், கள்ளுக்கடைகளை திறப்போம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது போன்ற வாக்குறுதிகளை தரும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும், எனவே நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்தார்.
இந்நிலையில், நெல்லை பெருமாள்புரம் கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணி நிர்வாகிகள் பிரவீன், வக்கீல் ஜிம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில்,
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். காமராஜர் ஆதித்தனார் கழக தலைவர் மறைந்த கராத்தே செல்வின் மனைவி வயோலா செல்வின், நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்து உள்ளார். அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
எனவே நெல்லை தொகுதியில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதை விரைவில் முடிவு செய்து அறிவிப்போம், ஆகையால் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம். என தெரிவித்துள்ளனர்.