• Thu. Dec 5th, 2024

தொகுதி மாறி வந்ததால் வேட்பாளர் பெயரை மாற்றி கூறி பிரச்சாரத்தில் ஈடுபட்ட கௌதமி…. ஷாக் ஆன கட்சியினர்….

ByNamakkal Anjaneyar

Apr 11, 2024

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரப் பகுதியான வாளரைகேட்டில் நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் ராஹா தமிழ்மணிக்கு வாக்கு சேகரிப்பதற்காக அதிமுக நட்சத்திர பேச்சாளர் கௌதமி வருகை தந்தார். அப்போது நாமக்கல் மாவட்ட அதிமுக கழக செயலாளரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் தங்கமணி கௌதமியை வரவேற்றார். அப்போது பிரச்சார வாகனத்தில் பேசத் துவங்கிய கௌதமி நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரின் பெயருக்கு பதிலாக ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் ஆற்றல் அசோக்குமார் பெயரை உச்சரித்தார். அதை கேட்டு ஷாக்கான கழகத்தினர் கூச்சலிட சுதாரித்துக் கொண்ட கௌதமி காலையிலிருந்து பல்வேறு தொகுதிகள் மாறி பிரச்சாரம் செய்து வருவதால் குழப்பம் அடைந்து விட்டதாக கூறி, மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்து நாமக்கல் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு வாக்களிக்குமாறு கேட்டு வாக்கு சேகரித்தார். திமுக ஆட்சியின் ஊழல்களை மனதில் வைத்து ஒற்றை விரலால் ஓங்கி அடித்து இரட்டை இலைக்கு வாக்கு செலுத்துங்கள் என பிரச்சாரம் செய்தார் கௌதமி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *