ஆசியாவிலேயே முதன் முறையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘ஸ்பிளிட் ஸ்கிரீன்’ திரைப்படம் பிகினிங்அதாவது தியேட்டர்களில் திரையில் இடது புறத்தில் ஒரு காட்சியும், வலது புறத்தில் வேறொரு காட்சியும் இடம் பெறும். கமர்சியல் சினிமாக்கள் வணிகரீதியாக வெற்றிபெற போராடிக்கொண்டிருக்கும் சூழலில் பரிசோதனை முயற்சியாக இந்தப் படத்தை திரைக்கதை வசனம் எழுதி இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஜெகன் விஜயா வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று திரைப்படம் இருக்கும் பிகினிங் படத்தில் இரண்டும் ஒரே நேரத்தில் பார்க்ககூடிய வகையில் திரைப்படம் இருக்கும் என்கிறார் இயக்குனர் ஜெகன் விஜயா
வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். படத்தில் நாயகனாக வினோத் கிஷன் நாயகியாக கௌரி கிஷன், சச்சின், மகேந்திரன், சுருளி, லகுபரன், பாலா, ரோகிணி ஆகியோர் நடித்திருக்கும் படத்திற்கு
கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்திருக்கிறார் படத்தை வணிகரீதியாக வியாபாரம் செய்து வெளியிட முடியாத குழவில் புதிய முயற்சிகளை ஊக்குவித்து, வாய்ப்பு தரும் இயக்குநர் லிங்குசாமியின்திருப்பதி பிரதர்ஸ் பிகினிங் படத்தை தமிழ்நாடு முழுவதும் 98 திரையரங்குகளில் வெளியிட்டு உள்ளனர் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளதாக கூறும் திருப்பதி பிரதர்ஸ் போஸ் நேற்றையதினம் தமிழ்நாடு முழுவதும் ஆரவாரத்துடன் இளைஞர்கள் படத்தை ரசித்து பார்த்தனர் என்றார் பதான், வாரிசு, துணிவு என மூன்று முக்கியமான படங்கள் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் பிகினிங் படத்தினை பார்க்க இளைஞர்கள் கூட்டம் திரையரங்கிற்கு வருவது மாற்று சினிமாவுக்கான ஆதரவாகவே பார்க்கிறோம் புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான முதல் படிக்கட்டு பிகினிங் என்றார் போஸ்லிங்குசாமி