• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு

ByT. Vinoth Narayanan

Mar 9, 2025

திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் கோட்டத்தின் சார்பில் வனத்துறை முதன்மைச் செயலாளரின் விருப்ப நிதியின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இயற்கை சார்ந்த பயிற்சி பட்டறைகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் 07.03.2025 முதல் 18.03.2025 வரை நடத்தப்படவுள்ளது.

அதன் ஒரு பகுதியாக இன்று செண்பகத் தோப்பில் உள்ள வனத்துறை புத்தாக்க பயிற்சி மையத்தில் வைத்து சாப்டூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இயற்கை சார்ந்த விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

இப்பயிற்சி முகாமினை திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பகம், திருவில்லிபுத்தூர் கோட்ட துணை இயக்குநர் ப.தேவராஜ், இவப தொடங்கி வைத்தார். இப்பயிற்சி முகாமில் சுமார் 40 மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.