• Wed. Mar 11th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

தென்காசி குருவிகுளத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா…

ByM.maniraj

Sep 6, 2022

தென்காசி மாவட்டம் குருவிகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப் பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதிரங்கராஜன் தலைமை வகித்தார். துணை தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். குருவிகுளம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் நர்மதா வரவேற்றார். நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு சத்தாண உணவு முறைகள், குழந்தைகளின் முதல் 1000 நாட்களின் முக்கியத்துவம், இரத்த சோகை வராமல் தடுக்கும் வழி முறைகள், பச்சிளம் குழந்தை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து பொதுமக்கள் அனைவரும் ஊட்டச்சத்து உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.