ஆண்டு தோறும் ஜூலை 1 தேசிய மருத்துவர்கள் தினமாக அனுசரிக்கப்பட்டு, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம் புதுக்கோட்டைக் கிளை சார்பாக தேசிய மருத்துவர்கள் தின விழா எம் ஏ கிராண்ட் ஹோட்டலில் அண்மையில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் இந்திய மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் ஆர். அனிதா தனசேகரன் அனைவரையும் வரைவேற்றார். செயலாளர் டாக்டர் கே. மாலா சங்கர் ஆண்டறிக்கை சமர்பித்தார். இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு ஜே. முகமது பர்வேஸ், இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் டாக்டர் பி.ஸ்ரீதர் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜி. ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். இவ்விழாவில் சிறப்பு கௌரவ விருந்தினராக புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம். முத்துராஜா, இந்திய மருத்துவ சங்கம் கிழக்கு மண்டல துணைத் தலைவர் டாக்டர் எஸ்.ராஜா மற்றும் தனியார் மருத்துவமனைகளின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கே.எச். சலீம், PPLS புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர்.எஸ்.பழனிவேல் ராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த மருத்துவர் விருது வழங்கி கௌரவித்தனர். இவ்விழாவில் மருத்துவத்துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் முகமது சுல்தான், கருப்பையா, ராஜேந்திரன், மதுராந்தகி, ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் மருத்துவர்கள் சிவகுமார் அருணகிரி ராயப்பன் குமார், செந்தில்குமார், செந்தில் அருண் ஆகியோருக்கு சிறந்த மருத்துவர்கள் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழ்நாடு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு முகமது பர்வேஸ் அவர்கள் பேசுகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்குள் மருத்துவத்துறை சார்ந்த எந்த உதவி வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் என்னிடம் கேட்கலாம் நான் செய்து தர தயாராக இருக்கிறேன் என்று கூறினார்.

ஏராளமான மருத்துவர்களும் மற்றும் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். இவ்விழாவின் இறுதியில் நிதிச் செயலாளர் டாக்டர் எம். கோபாலகிருஷ்ணன் நன்றியுரை வழங்கினார்.





