அரியலுார் ஊராட்சி ஒன்றிய கிழக்கு துவக்கப்பள்ளி வளாக த்தில் 58 ,தேசிய நூலக வாரவிழா நேற்று நடந்தது.விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் பள்ளி தலைமை ஆசிரியை அம்சவல்லி வரவேற்றார்.

விழாவிற்கு,வட்டார கல்வி அலுவலர் (பணி நிறைவு) ஹேமலதா முன்னிலை வகித்தார். விழாவிற்கு ,மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன் தலைமை தாங்கினார். இதில் வட்டார கல்வி அலுவலர்கள் ஆனந்தி, எழிலரசி கலந்துகொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நூலகம் செல்வதற்கான புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினர்.

தொடர் ந்து விழாவில் நடைபெற்ற திருக் குறள் எழுதும் போட்டியில், அப் பள்ளியை சேர்ந்த 05-ம் வகுப்பு மாணவி கா. லோகஸ்ரீ முதல் இடத்தையும் , சிவன்யா 2-ம் இடத்தையும் , திவ்யதர்ஷினி 3-ம் இடத்தையும் பிடித்தனர். போட்டி யில் வென்ற அவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.






; ?>)
; ?>)
; ?>)
