• Sat. Sep 27th, 2025
WhatsAppImage2025-09-25at201821
WhatsAppImage2025-09-25at2018203
WhatsAppImage2025-09-25at2018204
WhatsAppImage2025-09-25at2018211
WhatsAppImage2025-09-25at2018202
WhatsAppImage2025-09-25at2018201
WhatsAppImage2025-09-25at2018212
previous arrow
next arrow
Read Now

கோவையில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

BySeenu

Jun 6, 2024

கோவையில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ள தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி தொடரில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன.

சி.ஆர்.ஐ – பம்ப் கோப்பைக்கான பெண்கள் பிரிவு மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் கோப்பக்கான ஆண்கள் பிரிவு என தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டிகள் கோவை நேரு உள் விளையாட்டு அரங்கில் துவங்கியுள்ளது.

இதில் ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரி அணி,சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூர் பேங்க் ஆப் பரோடா அணி, லக்னோ உத்தரப்பிரதேச போலீஸ் அணி, புதுடெல்லி மத்திய செயலக அணி, சென்னை லயோலா அணி, திருவனந்தபுரம் கேரள மாநில மின்சார வாரிய அணி, மற்றும் கோயம்புத்தூர் கோவை மாவட்ட கொடைப்பந்து கழகம் உள்ளிட்ட 8 அணிகளும் பெண்கள் பிரிவில் திருவனந்தபுரம் கேரளா மாநில மின்சார வாரிய அணி, மும்பை மத்திய ரயில்வே அணி, மும்பை மேற்கு ரயில்வே அணி, சென்னை தென்னக ரயில்வே அணி, சென்னை ரைசிங் ஸ்டார் அணி, கொல்கத்தா கிழக்கு இந்திய அணி, செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணி மற்றும் கோயம்புத்தூர் கோவை மாவட்ட கோடைப்பந்து கழகம் உள்ளிட்ட எட்டு அணிகளும் பங்கேற்றுள்ளன. முன்னதாக நேற்று மாலை நடைபெற்ற துவக்க போட்டியின் ஆண்கள் பிரிவில் சென்னை வருமான வரி அணி மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணிகளும் மோதின. துவக்கம் முதலே மாறி மாறி தங்கள் ஆதிக்கத்தை செலுத்திய நிலையில் சென்னை வருமான வரி அணி வீரர்கள் லாவகமாக விளையாடி பந்தை கூடைக்குள் செலுத்தி 88-75 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றனர்.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் புதுடெல்லி மத்திய செயலக அணியை எதிர்த்து விளையாடிய கேரளா மாநில மின்சார வாரிய அணி வீரர்கள் 64-55 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்றனர். இதேபோல் சிஆர்ஐ பம்ப்ஸ் கோப்பக்கான முதல் போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணியை எதிர்த்து கோவை மாவட்ட கோடைப்பந்து கழக அணி விளையாடியது. இந்த போட்டியில் கேரள மாநில மின்சார வாரிய அணி வீராங்கனைகள் துவக்கம் முதலே அதிரடி காட்டினர். வேக வேகமாக அடுத்தடுத்து பந்தை கூடைக்குள் செலுத்திய அந்த அணி வீராங்கனைகள் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக அணி வீராங்கனைகளை திக்கு முக்காடச் செய்தனர். இறுதியில் 99-42 என்ற புள்ளி கணக்கில் அபார வெற்றி பெற்றனர். ஏழாம் தேதி வரை லீக் போட்டிகள் நடத்தப்பட்டு அதைத்தொடர்ந்து வருகின்ற எட்டாம் தேதி அரை இறுதி போட்டிகளும் வருகிற ஒன்பதாம் தேதி இறுதி போட்டியும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.