கோவை ஆடுகளத்தில் 21 மாநிலத்திலிருந்து வந்துள்ள 26 அணிகள் பலபரிட்சை நடைபெற்றது. சென்னையைச் சேர்ந்த விளையாட்டு ஊக்குவிப்பு நிறுவனமான எலிவ்8 இந்தியா ஸ்போர்ட்ஸ் (Elev8 India Sportz), கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 14.12.24 முதல் 10.1.25 வரை யுவா கபடி தொடரின் 11வது பதிப்பை நடத்துகிறது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு, கோவை பிரஸ் கிளப்பில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் யுவா கபடி தொடரின் தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கே கவுதம் மற்றும் போட்டியின் இயக்குநர் ஹரிஷ் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.
அவர்கள் பேசுகையில்; இங்கு நடைபெறும் பிரிவு போட்டிகளில் 21 மாநிலங்களைச் சேர்ந்த 26 அணிகள் பங்கேற்கின்றன என தெரிவித்தனர்.
இந்த போட்டிகள் பிரிவு 1,2,3 என மொத்தம் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன எனகூறிய அவர்கள் கோவை கற்பகம் பொறியியல் கல்லூரியில் 3வது மற்றும் 2வது பிரிவுகளில் தலா 37 போட்டிகளும், 1வது பிரிவில் 29 போட்டிகளும் நடைபெறுகிறது என்றனர்.
இந்த போட்டியில் வலுவான அணிகளான தமிழ்நாட்டைச் சேர்ந்த சென்னை தமிழாஸ், கற்பகம் ரைடர்ஸ், மற்றும் பழனி டஸ்கர்ஸ் ஆகிய 3 அணிகள் உடன் மற்ற மாநிலங்களில் ஹரியானாவிலிருந்து 3 அணிகள் மற்றும் ராஜஸ்தானில் இருந்து 2 அணிகள் பலம் வாய்ந்தவையாக விளங்குவதாக கூறினர்.
அவர்கள் தொடர்ந்து பேசுகையில், கடந்த 10 யுவா கபடி தொடரின் பதிப்புகளில் தமிழகத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட வீரர்கள் விளையாடியுள்ளனர், அவர்களில் 16 பேர் புரோ கபடி லீக்கு தேர்வாகி விளையாடி வருகின்றனர். இது இந்தியாவின் கபடி அரங்கில் மிகப்பெரிய உயரமாக கருதப்படுகிறது. தமிழகம் போல இந்த தொடர்களில் விளையாடிய பிற பகுதிகளை சேர்நத 120+ வீரர்கள் புரோ கபடி லீக்கில் இடம் பிடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கபடி போட்டி( Fancode )ஃபேன்கோட் OTT தளத்தில் நேரடியாக ஒளிபரப்பபடுகிறது. மொத்த பரிசுத் தொகை ரூ.20 லட்சம் ஆகும் . இறுதிப் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறுகிறது.
இதில் பாராட்டக்கூடியது என்னவென்றால், போட்டி ஏற்பட்டாளர்கள் அனைத்து வீரர்களுக்கும் வருடாந்திர திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துள்ளனர், இதன்மூலம் அவர்களின் வாழ்க்கை மற்றும் விளையாட்டுக்கு பாதுகாப்பிற்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.