• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பில்.., தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி..!

Byதரணி

Jan 26, 2024
இன்று நாடு முழுவதும் 75வது குடியரசு தினத்தை கொண்டாடி வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மைனாரிட்டி எஜிகேசன் டிரஸ்ட் சார்பாக தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் இ.செய்யதுஜஹாங்கீர் தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். 
இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் நிறுவனர் டி.செய்யது ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். அறக்கட்டளையின் செயலாளர் கே.ரஹமத்துல்லா மற்றும் பொருளாளர் எம்.மாபுபாட்ஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் எம்.டி.முகம்மதுஇப்ராஹிம் திவான் வரவேற்புரை வழங்கினார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரச் செயலாளர் ஏ.இக்பால் சிறப்புரை வழங்கினார்.
மேலும், இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தேசிய லீக் நகர தலைவர் முகம்மதுகான், இந்திய தேசிய லீக் நகரச் செயலாளர் ஜெ.முத்துவிலாஷா மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.