
நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு, சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரூராட்சி வளாகத்தில்தேசிய கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது. பின்னர் கொடி வணக்கம் செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் எஸ். எஸ் .கே. ஜெயராமன், துணைத் தலைவர் லதாகண்ணன் செயல் அலுவலர் செல்வகுமார் பணி நியமனக்குழு ஈஸ்வரி ஸ்டாலின் வார்டு கவுன்சிலர்கள் வழக்கறிஞர் சத்திய பிரகாஷ் எம். வி. எம். மருதுபாண்டியன் வள்ளி மயில் செல்வராணி , குருசாமி, நிஷாம், கௌதம ராஜா, சிவா, முத்து, செல்வி, சதீஷ் குருசாமி, கொத்தாலம் ,செந்தில் மற்றும் சுகாதார ஆய்வாளர் முருகானந்தம், இளநிலை உதவியாளர் கல்யாண சுந்தரம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் சோனை பாண்டி பூவலிங்கம், செல்வம், அசோக் மற்றும் பேரூராட்சி அனைத்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

