விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் முடங்கியாறு சாலையில் உள்ள தனியார் கூட்டரங்கில் நடைபெற்ற விழாவிற்கு நுகர்வோர் மாவட்ட பொதுச்செயலாளர் மனோகரன் சாமுவேல் தலைமை வகித்தார்.

செயலாளர் லட்சுமணசாமி வரவேற்றார். நிகழ்ச்சியில் இராஜபாளையம் வட்டாட்சியர் ராஜீவ் காந்தி, மாவட்ட வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அமர்நாத், மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் மாரியப்பன், தனி வட்டாட்சியர் ஆனந்தராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை அகில இந்திய நுகர்வோர் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ரவிக்குமார், துணைத் தலைவர் தர்மகிருஷ்ணராஜா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

மதுரை மண்டல செயலர் வசந்த் நுகர்வோர் அமைப்பின் நாட்காட்டியை வெளியிட்டார். அமைப்பின் பொருளாளர் வழக்கறிஞர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.




