• Fri. Apr 10th, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

கொடியேற்றத்துடன் துவங்கிய நத்தம் மாரியம்மன் கோவில் திருவிழா.,

ByS.Ariyanayagam

Feb 23, 2026

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருள்மிகு மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மார்ச்-10 அதிகாலையில் இருந்து மதியம் வரை அக்னிசட்டி எடுத்தல் மற்றும் கழுமரம் ஊன்றும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் மாலையில் கழுகுமரம் ஏறும் நிகழ்ச்சியும்,அதைத்தொடர்ந்து கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மார்ச்.11 மஞ்சள் நீராட்டு விழா மற்றும் இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதி உலாவுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.