• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சோழவந்தான் பிரளயநாதர் ஆலயத்தில், நரசிம்மர் ஜெயந்தி விழா:

ByN.Ravi

May 23, 2024

மதுரை மாவட்டம், சோழவந்தான் பிரளய நாத சிவன் ஆலயத்தில், நரசிம்ம
ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .
இதை ஒட்டி, இக்கோயில் பிரகாரத்தில் அமைந்துள்ள சக்கரத்தாழ்வாருக்கு, மற்றும் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகத்தின் வழிபாடு நடைபெற்றது. இதை அடுத்து நரசிம்மருக்கு அலங்காரமாகி அர்ச்சனைகள் தீபாராதனை நடைபெற்றது. இதை அடுத்து, கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. ஏராளமான பெண்கள் நரசிம்மருக்கு துளசி மாலை பானகம் படைத்து வழிபட்டனர். இந்நிகழ்ச்சியில், தொழில் அதிபர் எம். பி .எம் .மணி கவுன்சிலர் வளிமயில் மற்றும் கிராம பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதே போல, மதுரை அண்ணா நகர்,
தாசில்தார் நகர் சௌபாக்கிய ஆலயத்தில், நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, யோக நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.