பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேனி மாவட்ட பாஜக சார்பில் “நம்ம ஊர் மோடி பொங்கல்” என்ற பெயரில் பொங்கல் டாட் காம் சிறப்பாக நடைபெற்றது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நடைபெற்ற இந்த பாஜகவின் “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில செயலாளர் கதலி நரசிம்ம பெருமாள் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட பாஜக தலைவர், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்

இந்த “மோடி பொங்கல்” நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தலையில் பொங்கல் பானையை சுமந்து கொண்டு பெரியகுளம் பகுதியில் ஊர்வலமாக சென்று பின் பொங்கல் பானையில் பச்சரிசி, வெல்லம் போட்டு பொங்கலோ பொங்கல் என குலவையிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர்
தொடர்ந்து பெண்களுக்கு கோல போட்டி, சிறுவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.





