கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, பாஜக தேசிய செயல் தலைவர் நிதின் நபின் அவர்கள் நாளை கோயம்புத்தூர் வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் கோவையில் கோவில்களில் தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தின் அரசியல் நிலைகள் குறித்து எடுத்துரைக்கக்கூடிய மையக்குழு கூட்டத்திலும் அவர் கலந்து கொள்ள உள்ளார்.
அதிமுகவோடு தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எதுவும் பேசவில்லை, கேட்கவில்லை.

சென்சார் போர்டை பாஜக பயன்படுத்துவதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அமலாக்கத்துறை என்பது தனி அமைப்பு, வருமான வரித்துறை என்பது தனி ஆணையம். இதில் மத்திய அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
சென்சார் போர்டுக்கும் பாஜகவிற்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. ஜனநாயகன் படம் குறித்து சென்சார் போர்டு உறுப்பினர்கள் சில கருத்துக்களை கூறியுள்ளனர். திரைப்படங்களில் சிலவற்றை காட்டலாம் சிலவற்றை காட்டக்கூடாது என்பது உள்ளது. அதன் அடிப்படையில் அவர்கள் சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதை சரியா தவறா என்பது பாரதிய ஜனதா கட்சி சார்பில் கூற முடியாது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தேமுதிக வரவேண்டும் என நினைக்கிறோம். முடிவு அவர்களது கையில்தான் உள்ளது.
இன்றைய காலகட்டத்தில் பொதுமக்கள் எல்லா மொழிகளையும் படிப்பதற்கு ஆர்வமாக உள்ளனர். பராசக்தி படம் வந்த பின்பு தான் அதில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து தெரியும்.
பாஜக சார்பில் போட்டியிடுபவர்கள் குறித்து அகில இந்திய தலைமை தான் முடிவு செய்யும். நாங்கள் எங்களது விருப்பங்களை தெரிவித்துள்ளோம்.
ஜனநாயகம் படத்திற்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் பேசுவது காங்கிரஸ் கட்சி விஜயை நோக்கி செல்வதாக எங்களுக்கு தெரிகிறது.
தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களோடு கலந்து பேசி சுமுகமான முடிவு எடுக்கப்படும்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை அதன தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், பாமக மூத்த தலைவர் ராமதாஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து அவர்தான் முடிவு செய்ய வேண்டும்.
திமுக ஆட்சியை ராமதாஸ் நன்றாக இருப்பதாக கூறியுள்ளதிலிருந்து தெரிகிறது, 532 தேர்தல் வாக்குறுதிகளில் பொய்யான வாக்குறுதிகள் கொடுத்து, ஜாக்டோ ஜியோ விற்கு பழைய ஓய்வூதியம் தரப்படும் என்றார்கள், தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், ஆட்சிக்கு வந்து ஐந்து வருடம் ஆகியும் அதை செய்யவில்லை. இப்போது பேச்சுவார்த்தை நடத்தி ஜூன் மாதம் தருவோம் என கூறியுள்ளனர். ஜூன் மாதம் யார் ஆட்சியில் இருப்பார்கள்.. நிச்சயம் திமுக ஆட்சியில் இருக்காது. இது முழு பூசணிக்காய் சோற்றில் மறைப்பது போல் ஆகும். இப்படி பொய்யான ஆட்சியை திமுக நடத்தி வருகிறது.
அதிமுகவில் ஓபிஎஸ் தினகரனை இணைப்பது குறித்து அதன் பொதுச்செயலாளர் இ பி எஸ் தான் முடிவு செய்ய முடியும்.
பாரதிய ஜனதா கட்சி யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேலையில் இப்போதும் எப்போதும் ஈடுபடாது” என தெரிவித்தார்.




