• Sat. Dec 27th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன்..,

ByKalamegam Viswanathan

Dec 27, 2025

ஒட்டன்சத்திரம் செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்

தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகள் பிறகும் கூட நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. அதனால் தொடர்ந்து அவர்கள் போராடுகிறார்கள். ஜாக்டோ ஜியோ வும் ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடத்துவதாக இருக்கிறார்கள். சத்துணவு ஊழியர்களும் ஜாக்டோ ஜியோ வில் வருகிறார்கள் அவர்களும் போராட உள்ளார்கள்.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். நிறைய வாக்குறுதிகளை சொல்லியிருந்தார்கள். ஆனால் எந்த வாக்குறுதிகளையும் செய்ததாக இல்லை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடி வேண்டிய அரசாக இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு வருகின்ற தேர்தலில் வரும்.

கூட்டணி குறித்த கேள்விக்கு:

பொங்கல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து சொல்ல முடியும். இன்றைக்கு இருக்கும் கூட்டணிக்கே வெற்றி பெறுவோம். இன்னும் பல கட்சிகள் வந்தால் இன்னும் பலமான கூட்டணி அமையும்.

காசி தமிழ்ச் சங்கம் குறித்த கேள்விக்கு:

குஜராத்தை தொடர்ந்து தற்போது காசு தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். அதற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெஷல் ரயில், தனி பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. காசி தமிழ்ச் சங்கம் வெறும் மாநாடு மட்டுமல்ல அவர்கள் தென்காசியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் என தமிழ் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் இருக்கின்ற இடங்களில் எல்லாம் பார்த்துவிட்டு இறுதியாக காசியில் நடைபெறும் தமிழ் சங்கத்திற்கு செல்கிறார்கள்.

இப்போது 30ஆம் தேதி ராமநாதபுரத்தில் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூட கொள்கிறார்கள். தமிழுக்கு இப்படி பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரதமரை முதல்வர் விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்.

மோடி ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு போனாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை சொல்லி வருகிறார். தமிழ் மிகப் பழமையான மொழி. நிறைவு நிகழ்ச்சியாக ராமநாதபுரத்தில் 30ஆம் தேதி நடைபெறும்.
தமிழ் பண்பாடு நாகரிகம் பற்றி பிரதமர் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறார். அதன் நிறைவு நிகழ்ச்சி 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் முடியும்.

வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிரதமர் தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு:

பாஜக சார்பாக தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் என்கிற தலைப்பில் எல்லா கிராமத்திற்கும் சென்றுள்ளோம். நாளை காலை கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள். அதில் கலந்து கொள்ள உள்ள அதன் பிறகு ஊட்டியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். நிச்சயமாக நிறைவு விழா வரும்போது பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

விஜய் பாஜகவுடன் வந்தால் தான் பாதுகாப்பு என தமிழிசை கூறியது குறித்த கேள்விக்கு:

தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து. பாதுகாப்பு என்று அவர் குறிப்பிட்டு இருப்பது ஒருவேளை நாளை வேற மாதிரி சூழல் வந்தால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது. கரூரிலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. அதைத்தான் கருத்தாக சொல்லி இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு:

இது முதல்வர் செய்த மிகப்பெரிய தவறு. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், நீதிபதிகள் மீது இம்ப்ளிச்மென்ட் கொண்டு வருவது மோசமான முன்னுதாரணமான செயல். ஒவ்வொரு மக்கள் மனதிலும் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்துள்ளது. பூர்ண சந்திரன் தன்னை தானே எரித்துக் கொண்டார். அதேபோல திருப்பரங்குன்றத்தில் புனிதம் கெடக்கூடாது என்பதற்காக பெரியார் சிலை முன்பாக தீவைத்துக் கொண்டார். ஒரு நல்ல முன்னுதாரணம் இல்லை எந்த இளைஞர்களும் இந்த காரியத்தை செய்யக்கூடாது. அதே நேரம் ஒவ்வொருவரும் மனதிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உள்ளது. அதன் அடிப்படையில் அங்குள்ள பெண்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உமரமாக இருக்கிறார்கள் உண்மையிலேயே அது பக்தியின் அம்சமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

வெளியூரிலிருந்து வருபவர்கள் சிக்கந்தர் மலை என்று சொல்வதும் பிரியாணி எடுத்து வருவது குறித்த கேள்விக்கு:

அது திமுகவினரால் பரப்பி விடப்பட்ட செயல். வாக்கு வங்கிக்காக முதல்வர் பின்னணியில் இப்படி நடைபெறுகிறது என கூறினார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து வருகிறார். அதன். நேரடி காட்சிகளை காணலாம்.* தமிழிசை சௌந்தரராஜன் சொன்னது நல்ல கருத்து. பாதுகாப்பு என்று அவர் குறிப்பிட்டு இருப்பது ஒருவேளை நாளை வேற மாதிரி சூழல் வந்தால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது. கரூரிலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. -நயினார் நாகேந்திரன் பேட்டி

ஒட்டன்சத்திரம் செல்வதற்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார். தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்:

தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தேர்தல் நேரத்தில் கொடுத்த உத்தரவாதத்தை ஐந்தாண்டுகள் பிறகும் கூட நிறைவேற்றுவதற்கு அவர்களுக்கு மனமில்லை. அதனால் தொடர்ந்து அவர்கள் போராடுகிறார்கள். ஜாக்டோ ஜியோ வும் ஜனவரி 6-ம் தேதி முதல் போராட்டம் நடத்துவதாக இருக்கிறார்கள். சத்துணவு ஊழியர்களும் ஜாக்டோ ஜியோ வில் வருகிறார்கள் அவர்களும் போராட உள்ளார்கள்.

அரசு ஊழியர்கள் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தார்கள். நிறைய வாக்குறுதிகளை சொல்லியிருந்தார்கள். ஆனால் எந்த வாக்குறுதிகளையும் செய்ததாக இல்லை தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். போராடி வேண்டிய அரசாக இருக்கிறது. இதற்கெல்லாம் முடிவு வருகின்ற தேர்தலில் வரும்.

கூட்டணி குறித்த கேள்விக்கு:

பொங்கல் முடிந்த பிறகு கூட்டணி குறித்து சொல்ல முடியும். இன்றைக்கு இருக்கும் கூட்டணிக்கே வெற்றி பெறுவோம். இன்னும் பல கட்சிகள் வந்தால் இன்னும் பலமான கூட்டணி அமையும்.

காசி தமிழ்ச் சங்கம் குறித்த கேள்விக்கு:

குஜராத்தை தொடர்ந்து தற்போது காசு தமிழ் சங்கத்தை பிரதமர் மோடி நடத்துகிறார். அதற்கு இந்தியாவிலிருந்து ஸ்பெஷல் ரயில், தனி பேருந்துகள் அனுப்பப்பட்டுள்ளது. காசி தமிழ்ச் சங்கம் வெறும் மாநாடு மட்டுமல்ல அவர்கள் தென்காசியில் இருந்து புறப்பட்டு தஞ்சாவூர், பாண்டிச்சேரி, ஹைதராபாத் என தமிழ் நாகரீகம், பண்பாடு, கலாச்சாரம் இருக்கின்ற இடங்களில் எல்லாம் பார்த்துவிட்டு இறுதியாக காசியில் நடைபெறும் தமிழ் சங்கத்திற்கு செல்கிறார்கள்.

இப்போது 30ஆம் தேதி ராமநாதபுரத்தில் குடியரசுத் துணைத் தலைவர் மற்றும் மத்திய உயர்கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூட கொள்கிறார்கள். தமிழுக்கு இப்படி பெருமைகளை சேர்த்துக் கொண்டிருக்கும் பிரதமரை முதல்வர் விமர்சித்துக்கொண்டே இருக்கிறார்.

மோடி ஐநா சபைக்கு சென்றாலும், அயோத்திக்கு போனாலும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதை சொல்லி வருகிறார். தமிழ் மிகப் பழமையான மொழி. நிறைவு நிகழ்ச்சியாக ராமநாதபுரத்தில் 30ஆம் தேதி நடைபெறும்.
தமிழ் பண்பாடு நாகரிகம் பற்றி பிரதமர் எல்லா இடங்களிலும் சொல்லி வருகிறார். அதன் நிறைவு நிகழ்ச்சி 30-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் நடைபெற உள்ளது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விக்கு:

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் நடந்து கொண்டே இருக்கிறது. வெகு சீக்கிரத்தில் முடியும்.

வருகிற ஜனவரி மாதம் பொங்கலுக்கு பிரதமர் தமிழகம் வருவது குறித்த கேள்விக்கு:

பாஜக சார்பாக தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம் என்கிற தலைப்பில் எல்லா கிராமத்திற்கும் சென்றுள்ளோம். நாளை காலை கேப்டன் விஜயகாந்த் நினைவு நாள். அதில் கலந்து கொள்ள உள்ள அதன் பிறகு ஊட்டியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறேன். நிச்சயமாக நிறைவு விழா வரும்போது பிரதமரோ அல்லது உள்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொள்வார்கள்.

விஜய் உங்களுடன் வந்தால் தான் பாதுகாப்பு என தமிழிசை கூறியது குறித்த கேள்விக்கு:

தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் சொன்ன கருத்து நல்ல கருத்து. பாதுகாப்பு என்று அவர் குறிப்பிட்டு இருப்பது ஒருவேளை நாளை வேற மாதிரி சூழல் வந்தால் விஜய்க்கு பாதுகாப்பு இருக்காது. கரூரிலும் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை. அதைத்தான் கருத்தாக சொல்லி இருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்த கேள்விக்கு:

இது முதல்வர் செய்த மிகப்பெரிய தவறு. நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல், நீதிபதிகள் மீது இம்ப்ளிச்மென்ட் கொண்டு வருவது மோசமான முன்னுதாரணமான செயல். ஒவ்வொரு மக்கள் மனதிலும் கொழுந்து விட்டு எறிய ஆரம்பித்துள்ளது. பூர்ண சந்திரன் தன்னை தானே எரித்துக் கொண்டார். அதேபோல திருப்பரங்குன்றத்தில் புனிதம் கெடக்கூடாது என்பதற்காக பெரியார் சிலை முன்பாக தீவைத்துக் கொண்டார். ஒரு நல்ல முன்னுதாரணம் இல்லை எந்த இளைஞர்களும் இந்த காரியத்தை செய்யக்கூடாது. அதே நேரம் ஒவ்வொருவரும் மனதிலும் தீபம் ஏற்ற வேண்டும் என்று உள்ளது. அதன் அடிப்படையில் அங்குள்ள பெண்கள் தீபம் ஏற்ற வேண்டும் என்று உமரமாக இருக்கிறார்கள் உண்மையிலேயே அது பக்தியின் அம்சமாக வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.

வெளியூரிலிருந்து வருபவர்கள் சிக்கந்தர் மலை என்று சொல்வதும் பிரியாணி எடுத்து வருவது குறித்த கேள்விக்கு:

அது திமுகவினரால் பரப்பி விடப்பட்ட செயல். வாக்கு வங்கிக்காக முதல்வர் பின்னணியில் இப்படி நடைபெறுகிறது என நைனார் நாகேந்திரன் கூறினார்.