நாகர்கோயில் கோட்டார் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகளில் ஒன்றான பாலாலய பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோயில் சட்டமன்ற பாஜக உறுப்பினர் எம். ஆர் காந்தி மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், மராமத்து பொறி யாளர் ராஜ்குமார், நாகர்கோவில் தொகுதி சூப்பிரண்டு ஆனந்த், ஸ்ரீ காரியம் ராமச்சந்திரன் உட்பட அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.