பெருங்களத்தூரில் உள்ள புதிய மேம்பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும் என நாடார் பாதுகாப்பு பேரவையினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி.சாலையில் உள்ள காமராஜர் சிலைக்கு நாடார் பாதுகாப்பு பேரவை மற்றும் பெருங்களத்தூர் காமராஜர் நற்பணி மன்றம், பெருங்களத்தூர் – பீர்க்கண்காரணை அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அலங்கரிக்கப்பட்ட காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மாரியதை செலுத்தினர்.
அதனை தொடர்ந்து ஏழை எளியோர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பெருங்களத்தூர்- பீர்க்கன்காரணை அனைத்து வியாபாரிகள் நலச்சங்கத்தின் தலைவர் கெ.பாலமுருகன் ஏற்பாட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

அதன்பின்னர் நாடார் பாதுகாப்பு பேரவை தலைவர் இ.எம்.சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு நீண்டகாலமாக காமராஜர் பெயரை சூட்டவேண்டும் கோரிக்கை விடுத்து வருகின்றோம். வரக்கூடிய சட்டமன்ற தேர்தலை முன்னிட்டி விரைவில் காமராஜர் பெயரை பெருங்களத்தூர் மேம்பாலத்திற்கு சூட்ட வேண்டும் என தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார்.