தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க, அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், அ.பு. ம மு.க, ஆகிய கட்சிகள் சட்டமன்றத் தேர்தலில் போட்டி யிடும் வேட்பாளர்கள் அறிவித்தனர்.

அதனை தொடர்ந்து நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் கயிலை ராஜன் அறிவிக்கப்பட்டார். மேலும் அவர் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து நிலக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் பல ஊர்களுக்கு சென்று ஆதரவு திரட்டி வருகிறார்.
நேற்று நாம் தமிழர் கட்சி வேட்பாளராக டாக்டர் கயிலை ராஜன் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சுகுமாரிடம் தாக்கல் செய்தார். அவருடன் ஒருங்கிணைப்பாளர் சங்கிலி பாண்டியன், ஸ்டீபன் ஆகியோர் உடன் வந்து இருந்தனர். முன்னதாக நிலக்கோட்டை பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தனர்.




