

சென்னை எம்.ஜி.ஆர் மார்க்கெட் ரோட்டில் அமைந்துள்ள அரிசி கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம ஆசாமிகள்.., சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்கெட் ரோட்டில் பல வருடங்களாக அரிசி கடை நடத்தி வருபவர் ராம ஜெயம். இவர் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சென்னை மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்து வருகிறர்.
நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் காலை ஏழு மணி அளவில் கடையை திறக்க வந்த போது கடையின் பூட்டு உடைந்து கிடந்ததைப் பார்த்த ராம ஜெயம் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராமஜெயம் எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த கடையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
அதில், ஒரு மர்ம நபர் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே செல்லும் காட்சி காட்சி பதிவாகி இருந்தது. இந்த காட்சியை வைத்து மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து சற்று நேரத்தில் கடை முன்பு திரண்டு வந்த வணிகர் சங்க உறுப்பினர்கள் இன்று மட்டும் இந்த பகுதியில் 3 கடைகள் உடைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வணிகர்களுக்கு தொழில் செய்ய கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலைவி வருகிறது. இதனை உடனடியாகக் காவல் காவல் துறை குற்றவாளிகளை பிடித்து இதற்கு ஒரு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளனர்.
